ADDED : அக் 15, 2025 07:09 AM
போடி; போடி முத்தையன் செட்டிபட்டியை சேர்ந்தவர் அருண் 40. இவர் அனுமதி இன்றி முத்தையன் செட்டிபட்டியில் உள்ள மணப்பாறை ஓடையில் டிராக்டரில் மணல் அள்ளி கடத்த முயன்று உள்ளார்.
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும் அருண் தப்பி ஓடி விட்டார். போடி தாலுகா போலீசார் டிராக்டர் பறிமுதல் செய்து அருண் மீது வழக்கு பதிவு செய்தனர்.


