ADDED : ஜூன் 23, 2025 05:56 AM
கூடலுார் -: கூடலுாரில் இன்ஸ்பெக்டர் வனிதாமணி, எஸ்.ஐ., கருப்பையா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த மல்லிகா 50, ஜெயப்பிரதா 46, ஆகிய இருவரை சோதனை செய்தபோது போலீசாரிடம் தகராறு செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் சோதனை செய்த போது சில்லறை விற்பனை செய்வதற்காக 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.