/உள்ளூர் செய்திகள்/தேனி/ நிறுத்தப்பட்ட வைகை அணை நீர் 17 மணி நேரத்திற்கு பின் திறப்பு நிறுத்தப்பட்ட வைகை அணை நீர் 17 மணி நேரத்திற்கு பின் திறப்பு
நிறுத்தப்பட்ட வைகை அணை நீர் 17 மணி நேரத்திற்கு பின் திறப்பு
நிறுத்தப்பட்ட வைகை அணை நீர் 17 மணி நேரத்திற்கு பின் திறப்பு
நிறுத்தப்பட்ட வைகை அணை நீர் 17 மணி நேரத்திற்கு பின் திறப்பு
ADDED : செப் 24, 2025 06:42 AM
ஆண்டிபட்டி : மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் பெரியாறு ஒரு போக பாசன நிலங்களுக்கு செப்.18ல் வினாடிக்கு 1130 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
திறக்கப்பட்ட நீரின் அளவு செப்.21 ல் வினாடிக்கு 1530 கன அடியாக உயர்த்தப்பட்டது. பாசனத்திற்கு நீர் செல்லும் கால்வாயின் பல இடங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஆபத்தான குளியல் மேற்கொள்கின்றனர். நீர்வளத் துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தியும் யாரும் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், விராலிபட்டி அருகே கால்வாயில் மூழ்கிய சிறுவனை மீட்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு கால்வாய் வழியாக செல்லும் நீர் வைகை அணையில் இருந்து நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட நீர் 17 மணி 30 நிமிடத்திற்குப்பின் நேற்று மதியம் 3:30 மணிக்கு மீண்டும் கால்வாயில் நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக வைகை அணை நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.