ADDED : செப் 24, 2025 06:29 AM

பெரியகுளம் : வடுகபட்டி காமாட்சியம்மன் கோயில் அருகே பகிர்மான குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
பெரியகுளம் ஒன்றியம், கீழ வடகரை ஊராட்சிக்கு வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்.
இக்குடிநீர் திட்ட பகிர்மான குழாய் வடுகபட்டி காமாட்சியம்மன் கோயில் வழியாக கீழவடகரை ஊராட்சிக்கு செல்கின்றன. இப் பகிர்மான குழாய்கள் செல்லும் இரு இடங்களில் குடிநீர் குழாய் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சில தினங்களாக தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் 100 மீட்டர் தூரத்திற்கு வெளியேறி வீணாகி வருகிறது.
இதனால் கீழ வடகரை ஊராட்சியில் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வடுகபட்டி காமாட்சியம்மன் கோயில் கலையரங்கம் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
இதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இரவில் இந்தப்பகுதியை டூவீலரில் கடந்து செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர்.
பல நாட்களாக ரோட்டில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் ரோடு சேதமடைந்து வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.