/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ பரோலில் சென்றவர் தலைமறைவு 20 ஆண்டுகளுக்கு பின் கைது பரோலில் சென்றவர் தலைமறைவு 20 ஆண்டுகளுக்கு பின் கைது
பரோலில் சென்றவர் தலைமறைவு 20 ஆண்டுகளுக்கு பின் கைது
பரோலில் சென்றவர் தலைமறைவு 20 ஆண்டுகளுக்கு பின் கைது
பரோலில் சென்றவர் தலைமறைவு 20 ஆண்டுகளுக்கு பின் கைது
ADDED : ஜூலை 23, 2024 09:38 PM
நான்குநேரி:நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள மாயனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி பெருமாள், 47, கூலி தொழிலாளி. இவர் மீது, 1995ம் ஆண்டு மூன்றடைப்பு போலீசில் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, நான்குநேரி கோர்ட்டில் நடந்த வழக்கில், தண்டனை அளிக்கப்பட்டு, நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
பின், 2004ம் ஆண்டு மத்திய சிறையில் இருந்து பரோலில் வெளியே சென்றார். பரோல் முடிந்தும் அவர் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவானார். மூன்றடைப்பு போலீசார் அவர் மீது மற்றொரு வழக்கை பதிவு செய்து, தேடி வந்தனர். கேரளாவில் பதுங்கி இருந்த அவரை, போலீசார் நேற்று செய்தனர். பின், அவர் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.