/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ களக்காட்டில் சந்தனமரம் வெட்டிக் கடத்தல் களக்காட்டில் சந்தனமரம் வெட்டிக் கடத்தல்
களக்காட்டில் சந்தனமரம் வெட்டிக் கடத்தல்
களக்காட்டில் சந்தனமரம் வெட்டிக் கடத்தல்
களக்காட்டில் சந்தனமரம் வெட்டிக் கடத்தல்
ADDED : ஜூலை 24, 2024 10:56 PM
களக்காடு:களக்காட்டில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் சிங்கம்பத்தில் உள்ளது. நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் அங்கு வளர்ந்திருந்த சந்தன மரத்தை வெட்டி க்கடத்தி சென்றுள்ளனர். நேற்று காலை சந்தன மரம் வெட்டிக் கடத்தப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கோயில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து நிர்வாக அதிகாரி மாரியப்பன் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி சந்தன மரத்தை இரவோடு, இரவாக வெட்டிக் கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.