/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மகளிர் குழுக்களுக்கு ரூ.35 லட்சம் கடனுதவி மகளிர் குழுக்களுக்கு ரூ.35 லட்சம் கடனுதவி
மகளிர் குழுக்களுக்கு ரூ.35 லட்சம் கடனுதவி
மகளிர் குழுக்களுக்கு ரூ.35 லட்சம் கடனுதவி
மகளிர் குழுக்களுக்கு ரூ.35 லட்சம் கடனுதவி
ADDED : ஜூலை 31, 2024 12:55 AM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம், கச்சூர் ஆகிய கிராமங்களில், ‛மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சந்திரசேகர், பொன்னுசாமி முன்னிலை வகித்தனர்.
இதில் போந்தவாக்கம், மாம்பாக்கம், வேளகாபுரம், மாமண்டூர் உள்ளிட்ட, 15 கிராம மக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக வழங்கினர்.
கும்மிடிப்பூண்டி தி.மு.க., எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று, இக்கிராமங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு, 35 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கினார்.
மேலும், இலவச வீட்டு மனை, பட்டா மாற்றம், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட தேவைகள் குறித்து, 500க்கும் மேற்பட்டோர் மனுக்கள் வழங்கினர்.