ADDED : ஜூலை 31, 2024 12:53 AM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த பள்ளிபுரம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றுப்பாலத்தில் அமர்ந்து, இளைஞர்கள் சிலர் மதுபானம் மற்றும் கஞ்சா புகைத்து கொண்டு, அவ்வழியே செல்வோருக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது
தகவல் அறிந்து சென்ற போலீசார், ஐந்து பேரை பிடித்து காவல் நிலையம் அழைந்து வந்தனர். விசாரணையில், மீஞ்சூரைச் சேர்ந்த உதயகுமார், 22, ஹரிபிரசாத், 19, வினோத்ராஜ், 19, தேவகுமார், 19, விஜயசாரதி, 20, என்பதும், கஞ்சா போதைக்கு அடிமையாகி இருப்பதும் தெரிந்தது.
இதில், உதயகுமார் மற்றும் ஹரிபிரசாத் ஆகியோர், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என்பதும் தெரிந்தது.
இதையடுத்து ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், கஞ்சா வினியோகம் செய்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.