/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி கோவிலில் 8 சவரன் செயின் பறிப்பு திருத்தணி கோவிலில் 8 சவரன் செயின் பறிப்பு
திருத்தணி கோவிலில் 8 சவரன் செயின் பறிப்பு
திருத்தணி கோவிலில் 8 சவரன் செயின் பறிப்பு
திருத்தணி கோவிலில் 8 சவரன் செயின் பறிப்பு
ADDED : ஜூலை 30, 2024 06:46 AM
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு, நேற்று மதியம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கும்பினிபேட்டையைச் சேர்ந்த சுகுணா, 62, என்பவர் வந்தார்.
பின், பொது வழியில் மூலவரை தரிசித்துவிட்டு மலையில் இருந்து கீழே இறங்குவதற்காக கோவில் நிர்வாகத்தால் இயக்கப்படும் தனியார் பேருந்தில் ஏறினார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென சுகுணாவின் கழுத்தில் அணிந்திருந்த, 8 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
ஆடிக்கிருத்திகை விழாவிற்காக கோவில் நிர்வாகம் மற்றும் 750க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும், செயினை பறித்த மர்ம நபரை பிடிக்க முடியாமல் திணறியது பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கிஉள்ளது.