/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சுகாதார அமைச்சு பணி சங்க நிர்வாகிகள் தேர்வு சுகாதார அமைச்சு பணி சங்க நிர்வாகிகள் தேர்வு
சுகாதார அமைச்சு பணி சங்க நிர்வாகிகள் தேர்வு
சுகாதார அமைச்சு பணி சங்க நிர்வாகிகள் தேர்வு
சுகாதார அமைச்சு பணி சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூலை 30, 2024 06:45 AM
திருவள்ளூர்: திருவள்ளூரில் மாவட்ட பொது சுகாதார அமைச்சு பணி அலுவலர்கள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது.
அமைச்சு பணி அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலக நிர்வாக அலுவலர் விநாயகமூர்த்தி மற்றும் திருவள்ளூர் அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் திருவள்ளூர், பூந்தமல்லி ஆகிய இரண்டு சுகாதார மாவட்ட அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தை ஒருங்கிணைந்து, ஒரே மாவட்ட மையமாக செயல்பட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட தலைவராக பாபு, செயலராக சவுந்தரராஜன், பொருளாளராக சிவகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புதிய அமைச்சு பணியாளர்களை தேர்வு செய்வது, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் சாப்ட்வேர் வழங்குவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.