/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ கொடியேற்றம் கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ கொடியேற்றம்
கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ கொடியேற்றம்
கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ கொடியேற்றம்
கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ கொடியேற்றம்
ADDED : ஜூலை 30, 2024 06:44 AM

கூவம்: கடம்பத்துார் ஒன்றியம் கூவம் ஊராட்சியில் திரிபுர சுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் அமைந்துள்ள திரிபுர சுந்தரி அம்பாளுக்கு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று காலை 9:00 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடி எடுத்து வரப்பட்டு, யாகசாலை மண்டபத்தில் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, 9:45 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
இதில், கூவம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தினமும் காலை 7:00 மணிக்கு லட்சுமி, சரஸ்வதி, துர்கா சுவாமிகள் பவழக்கால் சப்பரத்திலும், இரவு 7:00 மணிக்கு திரிபுரசுந்தரி அம்பாள் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 4ம் தேதி காலை 8:00 - 9:00 மணிக்குள் நடைபெறும்.
வரும் 8ம் தேதி திருக்கல்யான வைபவம் நடைபெறும் என, ஹிந்து அறநிலைய துறையினர் தெரிவித்துள்ளனர்.