/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'இ - சேவை' மையம் அமைக்க கலெக்டருக்கு கோரிக்கை மனு 'இ - சேவை' மையம் அமைக்க கலெக்டருக்கு கோரிக்கை மனு
'இ - சேவை' மையம் அமைக்க கலெக்டருக்கு கோரிக்கை மனு
'இ - சேவை' மையம் அமைக்க கலெக்டருக்கு கோரிக்கை மனு
'இ - சேவை' மையம் அமைக்க கலெக்டருக்கு கோரிக்கை மனு
ADDED : ஜூலை 30, 2024 06:43 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் சென்றாயன்பாளையம் கிராமவாசிகள் சார்பில் சரவணன் என்பவர் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
பூண்டி ஒன்றியத்தில் உள்ள சென்றாயன்பாளையம், திருப்பேர், கிரீன்வேல்நத்தம், அரும்பாக்கம், நயப்பாக்கம், நம்பாக்கம், அரியத்துார் மற்றும் வெல்வாய் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி, சென்றாயன்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 1990ல், இந்த கிராமங்களில் சில பென்னலுார்பேட்டை மற்றும் மேட்டுப்பாளையம் வேளாண் கூட்டுறவு சங்கத்துடன் இணைக்கப்பட்டது. தற்போது, சென்றாயன்பாளையம் கூட்டுறவு சங்கத்தில், பயிர் கடன் தவிர வேறு சேவை எதுவும் வழங்கப்படவில்லை. 'இ - சேவை' வருவாய் துறை சான்று பெற, 7 கி.மீட்டர் பயணிக்க வேண்டி உள்ளது. நகைக்கடன், கால்நடை பராமரிப்பு, சுயஉதவிக் குழு கடன் பெற முடியாமல், இதர வணிக வங்கிகளுக்கு செல்ல, 20 கி.மீட்டர் துாரத்தில் உள்ள திருவள்ளூருக்கு செல்ல வேண்டியுள்ளது.
எனவே, சென்றாயன்பாளையம் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், 'இ - சேவை' மையம் மற்றும் இதர கடன் வசதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.