Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 100 நாள் வேலை கேட்டு கிராம சபையில் வாக்குவாதம்

100 நாள் வேலை கேட்டு கிராம சபையில் வாக்குவாதம்

100 நாள் வேலை கேட்டு கிராம சபையில் வாக்குவாதம்

100 நாள் வேலை கேட்டு கிராம சபையில் வாக்குவாதம்

ADDED : ஜூலை 02, 2024 10:35 PM


Google News
திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளிலும், சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியத்திற்கு உட்பட்ட, 526 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.

திருவள்ளூர் ஒன்றியத்தில், காக்களூர், கல்யாணகுப்பம், ஈக்காடு கண்டிகை உள்ளிட்ட 28 ஊராட்சி; பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர், சிறுவானுார் கண்டிகை உள்ளிட்ட கிராமங்களில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்ற கிராமவாசிகள், அடிப்படை வசதிகளான, சாலை, குடிநீர், மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட கோரிக்கையினை முன்வைத்து கோரிக்கை வைத்தனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 61 ஊராட்சிகளில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மீது நடத்தப்பட்ட கிராம சபை கூட்டங்களில், பயனாளிகள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் ஒன்றிய பற்றாளர் குமாரவேல் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எங்களுக்கு 100 நாள் வேலை குறைந்த அளவு தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளிடம் உங்கள் தெரிவித்து அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

திருத்தணி ஒன்றியத்தில் உள்ள, 27 ஊராட்சிகளில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. பெரும்பாலான ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் கோரிக்கை வைத்து மனு கொடுத்து கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

போந்தவாக்கம் ஊராட்சியில் தலைவர் சித்ரா தலைமையில் நடந்த கூட்டத்தில், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வது, விடுபட்ட பயனாளர்களை சேர்ப்பது, ஊரக குடியிருப்பு பகுதிகளை பராமரித்தல், பாரத பிரதரின் வீடு கட்டு திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனந்தேரி ஊராட்சியில் தலைவர் ஜெயந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- நமது நிருபர் குழு -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us