/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி ரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம் கோரிக்கை திருத்தணி ரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம் கோரிக்கை
திருத்தணி ரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம் கோரிக்கை
திருத்தணி ரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம் கோரிக்கை
திருத்தணி ரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம் கோரிக்கை
ADDED : ஜூலை 02, 2024 09:28 PM
திருத்தணி:திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து, திருப்பதி, ரேணிகுண்டா , அரக்கோணம், திருவள்ளூர், சென்னை சென்டரல், சென்னை கடற்கரை, வேளச்சேரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு தினமும் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில்கள் மூலம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் சென்று வருகின்றனர்.
தவிர திருத்தணி ரயில் நிலையம் வழியாக மும்பை, ஐதராபாத் விசாகப்பட்டினம் உள்பட வெளிமாநிலங்களுக்கு பயணியர் சென்று வருகின்றனர்.
திருத்தணி ரயில் நிலையத்திற்கு, 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சென்னை, ரேணிகுண்டா மார்கமாக செல்வதற்கு இரு சக்கர வாகனங்கள் மூலம் வந்து ரயில் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் நிறுத்தவிட்டு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வேலைக்கும், மாணவர்கள் கல்லுாரி படிப்பிற்கும், வியாபாரிகள் சென்றும் வருகின்றனர்.
இந்நிலையில் திருத்தணி ரயில் நிலையத்தில் புறக்காவல் மையம் அமைக்க வேண்டும் என, ரயில் பயணியர் சங்கம் சார்பில், பலமுறை சென்னை ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளனர். புறக்காவல் மையம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.