/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கச்சூரில் நிற்காத பேருந்துகள் கிராமவாசிகள் கடும் அவதி கச்சூரில் நிற்காத பேருந்துகள் கிராமவாசிகள் கடும் அவதி
கச்சூரில் நிற்காத பேருந்துகள் கிராமவாசிகள் கடும் அவதி
கச்சூரில் நிற்காத பேருந்துகள் கிராமவாசிகள் கடும் அவதி
கச்சூரில் நிற்காத பேருந்துகள் கிராமவாசிகள் கடும் அவதி
ADDED : ஜூலை 30, 2024 07:00 AM
திருவள்ளூர்: கச்சூரில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்லாததால், கிராமவாசிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
திருவள்ளூர் பாஸ்கர் ராவ் என்பவர், திருவள்ளூர் கலெக்டரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு, தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள், கச்சூரில் நின்று செல்வதில்லை. கச்சூர் பகுதியில் மலைவாழ் இருளர்கள், மாற்றுத்திறனாளிகள் என, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மகளிர் கட்டணமில்லா பேருந்துகளும் இங்கு நிறுத்தப்படாததால், கிராமவாசிகள் 20 ரூபாய் கூடுதலாக செலவழித்து, ஊத்துக்கோட்டைக்கு ஆட்டோவில் சென்று வருகின்றனர்.
எனவே, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கச்சூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வாரம் நடந்த 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமிலும், இதுகுறித்து கிராமவாசிகள் மனு அளித்துள்ளனர்.