/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கம்பம் இருக்கு... மின்விளக்கு எங்கே? கம்பம் இருக்கு... மின்விளக்கு எங்கே?
கம்பம் இருக்கு... மின்விளக்கு எங்கே?
கம்பம் இருக்கு... மின்விளக்கு எங்கே?
கம்பம் இருக்கு... மின்விளக்கு எங்கே?
ADDED : ஜூலை 30, 2024 06:59 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம் நொச்சிலி கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் சாலையில், மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இச்சாலையில் உள்ள கம்பங்களில் மின் விளக்கு பொறுத்தப்படாமல் உள்ளது.
இதனால், இரவு நேரத்தில் இருளில் மிதக்கும் சாலையில் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் பொதுமக்கள் சாலையில் நடக்க அச்சப்படுகின்றனர்.
மேலும், இரவு நேரத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இதுகுறித்து, பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கிராமவாசிகள் புகார் அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, மின்கம்பங்களில் விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம வாசிகள் சார்பில், கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.