/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ செப்., 1 முதல் நெல் கொள்முதல் மத்திய அரசு அனுமதி: ராதாகிருஷ்ணன்.. செப்., 1 முதல் நெல் கொள்முதல் மத்திய அரசு அனுமதி: ராதாகிருஷ்ணன்..
செப்., 1 முதல் நெல் கொள்முதல் மத்திய அரசு அனுமதி: ராதாகிருஷ்ணன்..
செப்., 1 முதல் நெல் கொள்முதல் மத்திய அரசு அனுமதி: ராதாகிருஷ்ணன்..
செப்., 1 முதல் நெல் கொள்முதல் மத்திய அரசு அனுமதி: ராதாகிருஷ்ணன்..
ADDED : ஜூலை 30, 2024 06:37 AM
சென்னை: ''விவசாயிகளிடம் இருந்து வரும் செப்., 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்ய, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது,'' என, கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு, அமுதம் அங்காடியில், செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், வாணிப கழக மேலாண் இயக்குனர் அண்ணாதுரை, உணவு வழங்கல் துறை இயக்குனர் மோகன், சேமிப்பு கிடங்கு நிறுவன மோலண் இயக்குனர் பழனிசாமி உடன் இருந்தனர்.
பின், ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
விவசாயிகளிடம் இருந்து, 2023 - 24 சீசனில் இதுவரை, 32.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, இந்திய உணவு கழகம், கடந்த ஆண்டை போல், 2024 - 25ம் ஆண்டுக்கும், ஒரு மாதம் முன்கூட்டியே, வரும் செப்., 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக, குவிண்டால் சன்னர ரக நெல்லுக்கு, 2,450 ரூபாயும்; பொது ரக நெல்லுக்கு, 2,405 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் வரும் மாதங்களில் துவரம் பருப்பு, பாமாயில் தாமதமின்றி வழங்கப்படும். கடந்த ஆண்டில், 4.54 லட்சம் நகல் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து, ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு அடுத்த, 15 தினங்களுக்குள் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, இந்தாண்டில் இதுவரை, 20,807 கோடி ரூபாய்க்கு பல்வேறு வகை கடன் வழங்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க அதிகாரிகள், களப்பணி மேற்கொண்டு, தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.