/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருமண மண்டபத்திற்கு தடுப்பு வேலி பணி ‛ திருமண மண்டபத்திற்கு தடுப்பு வேலி பணி ‛
திருமண மண்டபத்திற்கு தடுப்பு வேலி பணி ‛
திருமண மண்டபத்திற்கு தடுப்பு வேலி பணி ‛
திருமண மண்டபத்திற்கு தடுப்பு வேலி பணி ‛
ADDED : ஜூன் 30, 2024 12:40 AM

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர்.
சில பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக, மலைக்கோவில் அலுவலகம் பின்புறத்தில் உள்ள ஆர்.சி.சி.
மண்டபத்தில் பக்தர்கள் இலவசமாக இரவில் தங்கிச் செல்வர். குறிப்பாக தினமும் ஆர்.சி.சி., மண்டபத்தில்,150க்கும் மேற்பட்ட பக்தர்கள் இரவில் படுத்து உறங்குவர். மேலும், சிலர் வேண்டுதலுக்காக, ஆர்.சி.சி. மண்டபத்தில் திருமணம் செய்துக் கொள்வர். திருமணம் கோவில் சார்பில் நடத்தப்படுகிறது.
ஆர்.சி.சி.மண்டபத்திற்கு சுற்றுசுவர் இல்லாததால் பக்தர்கள் பாதுகாப்பின்றியும், இரவு நேரத்தில் சிலர் பொருட்களை திருடிச் செல்வது வழக்கமாக நடந்து வந்தது. இதையடுத்து உபயதாரர் மூலம், 10 லட்சம் ரூபாய் நன்கொடையாக பெற்று தற்போது ஆர்.சி.சி. மண்டபத்திற்கு தடுப்பு வலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.