/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ எலும்புக்கூடான மின்கம்பம் எல்.வி.புரம் வாசிகள் அச்சம் எலும்புக்கூடான மின்கம்பம் எல்.வி.புரம் வாசிகள் அச்சம்
எலும்புக்கூடான மின்கம்பம் எல்.வி.புரம் வாசிகள் அச்சம்
எலும்புக்கூடான மின்கம்பம் எல்.வி.புரம் வாசிகள் அச்சம்
எலும்புக்கூடான மின்கம்பம் எல்.வி.புரம் வாசிகள் அச்சம்
ADDED : ஜூன் 30, 2024 12:43 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன் றியம் எல்.வி.புரம் கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிவாசிகள் அத் தியாவசிய தேவை களுக்கு கூட மணவூர் பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது.
இந்நிலையில், கிராமத்தின் நுழைவு பகுதியில் மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள இடத்தில், அடுத்தடுத்து உள்ள இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்து சிமென்ட் பூச்சு உதிர்ந்து, எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.இதனால் மக்கள் இந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து பேரம்பாக்கம் மின்துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் புலம்புகின்றனர்.மேலும் சிறியளவு காற்று வீசினாலே இந்த மின் கம்பம் விழும் என்பதால், அப்பகுதியினர் பீதியில் உள்ளனர். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.