/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பணிபுரிந்த வீட்டில் திருடியவர் கைது பணிபுரிந்த வீட்டில் திருடியவர் கைது
பணிபுரிந்த வீட்டில் திருடியவர் கைது
பணிபுரிந்த வீட்டில் திருடியவர் கைது
பணிபுரிந்த வீட்டில் திருடியவர் கைது
ADDED : ஜூலை 28, 2024 11:01 PM
அமைந்தகரை: அமைந்தகரையை சேர்ந்தவர் ஜெயா சபரிராஜா, 38; டாக்டர். இவர், அமைந்தகரை காவல் நிலையத்தில் கடந்த 25ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், தன் வீட்டில் வைத்திருந்த, 17 சவரன் நகை மாயமானது. வீட்டில் பணிபுரியும் செல்வி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
விசாரணையில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த செல்வி, 45, என்பவர் சிறுக சிறுக நகைகளை திருடி விற்றது தெரிந்தது. செல்வியை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், 5 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.