/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாயமாகி வரும் இரும்பு தடுப்புகள் நெ-.சா.துறை துாக்கம் கலையுமா? மாயமாகி வரும் இரும்பு தடுப்புகள் நெ-.சா.துறை துாக்கம் கலையுமா?
மாயமாகி வரும் இரும்பு தடுப்புகள் நெ-.சா.துறை துாக்கம் கலையுமா?
மாயமாகி வரும் இரும்பு தடுப்புகள் நெ-.சா.துறை துாக்கம் கலையுமா?
மாயமாகி வரும் இரும்பு தடுப்புகள் நெ-.சா.துறை துாக்கம் கலையுமா?
ADDED : ஜூலை 28, 2024 11:00 PM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த ஆலாடு - தத்தமஞ்சி இடையேயான மாநில நெடுஞ்சாலையில் உள்ள ரெட்டிப்பாளையம் கிராமத்தில், 2015ல் ஆரணி ஆற்று கரைகள் உடைந்து, மழைநீரில் 100 மீட்டர் நீளத்திற்கு சாலை அரித்து செல்லப்பட்டது.
அப்பகுதியில் சாலை 3 மீட்டருக்கு உயர்த்தப்பட்டு, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
நெடுஞ்சாலைத் துறையினர் தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாததால், காலப்போக்கில் அவற்றின் ஒவ்வொரு பகுதியாக சேதம் அடைந்தன. இரும்பு தடுப்புகள் கீழே விழுந்து, போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்றன.
சேதமடைந்து கீழே விழுந்த இரும்பு தடுப்புகள், தற்போது ஒவ்வொன்றாக மாயமாகின்றன. இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்ட இடத்தில், இருபுறமும் 10 அடி ஆழமான பகுதியும், அதில் மழைநீரும் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த பாதை வழியாக ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சி, காட்டூர், வேலுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கிராமவாசிகள் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் அவர்கள் அசம்பாவிதங்களில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, எஞ்சியுள்ள இரும்பு தடுப்புகள் மாயமாகும் முன், அவற்றை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிள் கோரிக்கை விடுத்துள்ளனர்.