Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 17 மாணவ - மாணவியருக்கு ரூ.11 லட்சம் விபத்து காப்பீடு

17 மாணவ - மாணவியருக்கு ரூ.11 லட்சம் விபத்து காப்பீடு

17 மாணவ - மாணவியருக்கு ரூ.11 லட்சம் விபத்து காப்பீடு

17 மாணவ - மாணவியருக்கு ரூ.11 லட்சம் விபத்து காப்பீடு

ADDED : செப் 23, 2025 10:27 PM


Google News
திருவள்ளூர்:வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 17 மாணவ - மாணவியருக்கு, 11.50 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு பத்திரம் வழங்கப்பட்டது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில், வருமானம் ஈட்டும் முதன்மையான குடும்ப தலைவர் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, பாதிக்கப்படும் மாணவ - மாணவியருக்கு விபத்து காப்பீடு பத்திரம், பள்ளி கல்வி துறை வாயிலாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ௧௭ மாணவ - மாணவியருக்கு, 11.50 லட்சம் ரூபாய் விபத்து காப்பீட்டு பத்திரத்தை நேற்று, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வழங்கினார்.

தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற மூன்று தலைமை ஆசிரியர் மற்றும் 10 ஆசிரியர்களை, கலெக்டர் பாராட்டினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us