/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 151 கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு 151 கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
151 கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
151 கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
151 கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 23, 2025 10:27 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 151 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள 151 கிராம உதவியாளர் பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாக விண்ணப்பம் பெற்று, பணி நியமனம் செய்யப்படவுள்ளது.
இப்பணிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து, தற்போது விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பொது பிரிவினர் 32, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதரவற்ற விதவை 39 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், ஆதரவற்ற விதவை வயது 42க்குள் இருக்க வேண்டும்.
மேலும், https://tiruvallur.nic.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அக்., 8ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.