/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ முதல்வர் விளையாட்டு போட்டி 2,135 பேருக்கு பரிசு முதல்வர் விளையாட்டு போட்டி 2,135 பேருக்கு பரிசு
முதல்வர் விளையாட்டு போட்டி 2,135 பேருக்கு பரிசு
முதல்வர் விளையாட்டு போட்டி 2,135 பேருக்கு பரிசு
முதல்வர் விளையாட்டு போட்டி 2,135 பேருக்கு பரிசு
ADDED : செப் 25, 2025 01:30 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 2,135 வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, கடந்த ஆக., 26ல் துவங்கியது. தடகளம், இறகு பந்து, சதுரங்கம், நீச்சல் உள்ளிட்ட 57 வகையான போட்டிகள் நடந்தன.
ஐந்து பிரிவுகளில் நடந்த போட்டிகளில், 47,860 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இதில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 2,135 வீரர் - வீராங்கனையருக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் முன்னிலையில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்று, 43.05 லட்சம் ரூபாய் பரிசு வழங்கினார்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடத்தைப் பெற்ற 660 பேர், அக்., 2ம் தேதி துவங்கும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.