/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வினாடிக்கு 300 கன அடியாக கிருஷ்ணா நீர் வரத்து குறைப்பு வினாடிக்கு 300 கன அடியாக கிருஷ்ணா நீர் வரத்து குறைப்பு
வினாடிக்கு 300 கன அடியாக கிருஷ்ணா நீர் வரத்து குறைப்பு
வினாடிக்கு 300 கன அடியாக கிருஷ்ணா நீர் வரத்து குறைப்பு
வினாடிக்கு 300 கன அடியாக கிருஷ்ணா நீர் வரத்து குறைப்பு
ADDED : செப் 25, 2025 01:31 AM
ஊத்துக்கோட்டை:தமிழகத்திற்கு வினாடிக்கு, 1,250 கன அடி வீதம் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், திடீரென 300 கன அடியாக குறைக்கப்பட்டது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதனால், தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது.
ஆந்திராவில், 152 கி.மீ., சாய்கங்கை கால்வாயில் பயணித்து, தமிழக - ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட் வழியே, பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
கண்டலேறுவில் வினாடிக்கு, 1,750 கன அடி வீதம் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், படிப்படியாக குறைக்கப்பட்டு, 300 கன அடியாக குறைக்கப்பட்டது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, ஜீரோபாயின்டில் வினாடிக்கு, 300 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இது படிப்படியாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.