/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சிற்றரசூர் சாலை படுமோசம் கிராம மக்கள் தடுமாற்ற பயணம் சிற்றரசூர் சாலை படுமோசம் கிராம மக்கள் தடுமாற்ற பயணம்
சிற்றரசூர் சாலை படுமோசம் கிராம மக்கள் தடுமாற்ற பயணம்
சிற்றரசூர் சாலை படுமோசம் கிராம மக்கள் தடுமாற்ற பயணம்
சிற்றரசூர் சாலை படுமோசம் கிராம மக்கள் தடுமாற்ற பயணம்
ADDED : ஜூன் 21, 2025 12:44 AM

பொன்னேரி,:விடதண்டலம் - சிற்றரசூர் சாலை சேதமடைந்து இருப்பதால், கிராம மக்கள் தடுமாற்றத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில் இருந்து, விடதண்டலம் வழியாக சிற்றரசூர் செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இச்சாலை முழுதும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளன. சேதமடைந்த சாலை வழியாக கிராம மக்கள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
மெதுார் - விடதண்டலம் இடையே, சமீபத்தில், 4.17 கோடி ரூபாயில் சாலை புதுப்பிக்கப்பட்டது. அதே சமயம், விடதண்டலம் - சிற்றரசூர் இடையேயான, 1.2 கி.மீ., சாலையை புதுப்பிக்காமல் அப்படியே விடப்பட்டு உள்ளது.
இந்த சாலை, 10 ஆண்டுகளாக இதே நிலையில் தான் உள்ளது.
விடதண்டலம், ஆவூர், வேம்பேடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இச்சாலை வழியாக பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு கும்மிடிப்பூண்டி சென்று வருகின்றனர்.
சேதமடைந்த சாலையால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.