/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மருத்துவ கல்லுாரி சாலையில் மரக்கன்று வளர்ப்பு மருத்துவ கல்லுாரி சாலையில் மரக்கன்று வளர்ப்பு
மருத்துவ கல்லுாரி சாலையில் மரக்கன்று வளர்ப்பு
மருத்துவ கல்லுாரி சாலையில் மரக்கன்று வளர்ப்பு
மருத்துவ கல்லுாரி சாலையில் மரக்கன்று வளர்ப்பு
ADDED : ஜூன் 21, 2025 12:43 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி செல்லும் சாலையை பசுமையாக மாற்ற, புதிதாக மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி, மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
மூன்று ஆண்டுகளாக இந்த மருத்துவக் கல்லுாரி செயல்பட்டு, மாணவர்கள் பயின்று வருகின்றனர். திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில், டோல்கேட் அருகிலிருந்து மருத்துவக் கல்லுாரிக்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதை பசுமை வழிச்சாலையாக மாற்றும் வகையில், இருபுறமும் புதிதாக மரக்கன்றுகள் அமைக்கப்பட்டு, முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மரங்கள் அனைத்தும் நன்கு வளர்ந்ததும், இச்சாலை முழுதும் பசுமையாக காட்சியளிக்கும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.