/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 10 ஏக்கர் நிலத்திற்கு பட்டா கேட்டு மனு சிறப்பு முகாமில் அதிர்ச்சியான கலெக்டர் 10 ஏக்கர் நிலத்திற்கு பட்டா கேட்டு மனு சிறப்பு முகாமில் அதிர்ச்சியான கலெக்டர்
10 ஏக்கர் நிலத்திற்கு பட்டா கேட்டு மனு சிறப்பு முகாமில் அதிர்ச்சியான கலெக்டர்
10 ஏக்கர் நிலத்திற்கு பட்டா கேட்டு மனு சிறப்பு முகாமில் அதிர்ச்சியான கலெக்டர்
10 ஏக்கர் நிலத்திற்கு பட்டா கேட்டு மனு சிறப்பு முகாமில் அதிர்ச்சியான கலெக்டர்
ADDED : மார் 20, 2025 09:23 PM
ஊத்துக்கோட்டை:அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து மாந்தோப்பு வைத்துள்ள நிலையில், அதற்கு பட்டா கேட்டு மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் பிரதாப் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் மனு பெற்றனர். அப்போது சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜம்மாள், 78 என்பவர் மனு கொடுத்தார்.
அதில், சென்னையில் வசிக்கும் நாங்கள், கும்மிடிப்பூண்டி வட்டம், கரடிப்புத்துார் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கல்லாங்குத்து வகையைச் சேர்ந்த, 10 ஏக்கர் நிலத்தை கடந்த, 34 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். தற்போது வரை எங்களது பராமரிப்பில் உள்ளது. அதில் மா மரங்கள் வைத்து பராமரித்து வருகிறோம். இந்த 10 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். அதில் மண் எடுக்க அனுமதிக்கவும் வேண்டும் என, கூறியிருந்தது.
இதை பார்த்த கலெக்டர் பிரதாப், அதிர்ச்சி அடைந்தார். 'அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது தவறு. நீங்கள் ஆக்கிரமிப்பு செய்து விட்டு அதற்கு பட்டாவும் கேட்கிறீர்கள். இதுவரை நீங்கள் பயன்படுத்தியதற்கு அரசுக்கு நீங்கள் தான் வரி கட்ட வேண்டும்' என்றார்.
தொடர்ந்து வருவாய்த் துறையினரிடம் மனுவை அளித்து, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து நிலத்தை மீட்க நடவடிக்கை எடுங்கள் என உத்தரவிட்டார். இச்சம்பவம் வருவாய்த் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.