/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் விபத்தில் பலி பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் விபத்தில் பலி
பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் விபத்தில் பலி
பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் விபத்தில் பலி
பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் விபத்தில் பலி
ADDED : மார் 20, 2025 09:25 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலையோர கல் மீது மோதி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார்.
தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சென்று உடலை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விபத்தில் சிக்கிய ஸ்பிளெண்டர் இருசக்கர வாகனம் கடம்பத்துார் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கோபிநாத், 46 என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனம் மாயமானதாகவும், கடம்பத்துார் போலீசில் புகார் செய்ததாகவும் தெரிவித்தார்.
தொடர் விசாரணையில், விபத்தில் உயிரிழந்த வாலிபர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பாணாவரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 23 என தெரிந்தது.
கடம்பத்துாரில் இருசக்கர வாகனத்தை திருடி சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.