/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாநில எல்லை சோதனை சாவடிகளில் தொடர் கண்காணிப்பு அவசியம் மாநில எல்லை சோதனை சாவடிகளில் தொடர் கண்காணிப்பு அவசியம்
மாநில எல்லை சோதனை சாவடிகளில் தொடர் கண்காணிப்பு அவசியம்
மாநில எல்லை சோதனை சாவடிகளில் தொடர் கண்காணிப்பு அவசியம்
மாநில எல்லை சோதனை சாவடிகளில் தொடர் கண்காணிப்பு அவசியம்
ADDED : செப் 26, 2025 04:05 AM
பள்ளிப்பட்டு:ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள சோதனை சாவடிகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரின் பேருந்து நிலையத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்ட எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லையில், இரு மாநில சோதனை சாவடிகள் அமைந்துள்ளன. இந்த சோதனை சாவடிகளை ஒட்டி, சித்துார் - கார்வேட் நகரம் நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
கடந்த, 2020ல் இந்த இரு மாநில சோதனை சாவடிகளும் தீவிரமாக செயல்பட்டு வந்தன.
அதன்பின், தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு இல்லாத இந்த சோதனை சாவடிகள் வழியாக, கடத்தல் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. திருப்பதி பகுதியில் இருந்து இந்த மார்க்கமாக கடத்தப்பட்டு வந்த செம்மரக்கட்டைகள் உள்ளிட்டவை பிடிபட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசியும் கடத்தப்படுகிறது. இதுபோன்ற குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக, இந்த சோதனை சாவடிகளை முழு நேரமும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.