/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ எஸ்.பி.கண்டிகை கூட்டு சாலையில் சாலை தடுப்பு: வாகன ஓட்டிகள் அவதி எஸ்.பி.கண்டிகை கூட்டு சாலையில் சாலை தடுப்பு: வாகன ஓட்டிகள் அவதி
எஸ்.பி.கண்டிகை கூட்டு சாலையில் சாலை தடுப்பு: வாகன ஓட்டிகள் அவதி
எஸ்.பி.கண்டிகை கூட்டு சாலையில் சாலை தடுப்பு: வாகன ஓட்டிகள் அவதி
எஸ்.பி.கண்டிகை கூட்டு சாலையில் சாலை தடுப்பு: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 26, 2025 04:06 AM

ஆர்.கே.பேட்டை:எஸ்.பி.கண்டிகை கூட்டு சாலையில் வைக்கப்பட்ட சாலை தடுப்பால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டையில் இருந்து திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில், எஸ்.பி.கண்டிகை கூட்டு சாலையில், தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளை முன்கூட்டியே எச்சரிக்கும் வெள்ளை கோடுகள் சாலையில் ஏற்படுத்தப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ள இந்த பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளால், இந்த சாலை தடுப்பை கவனிக்க முடியவில்லை. இதனால், சாலை தடுப்பில் மோதிக்கொள்ளும் நிலை உள்ளது.
மேலும், இந்த சாலை தடுப்பை ஒட்டி மரத்தடியில் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர்.
சமீபத்தில் கார் ஒன்று சாலையோர புளியமரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இதனால், இந்த பகுதியில் சாலையோர மரங்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.