/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்
ADDED : செப் 23, 2025 10:30 PM
மீஞ்சூர்:தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி, பொன்னேரி, அத்திப்பட்டு புதுநகரில் போராட்டங்கள் நடந்தன.
தமிழக அரசு நிறுவனங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதாக, 2021ல் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது.
தேர்தல் வாக்குறுதிப்படி, மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஒப்பந்த ஊழியர்கள், பொன்னேரி மின்வாரிய அலுவலகம் அருகே மறியல் போராட்டத்திற்கு தயாராகினர்.
அதேபோல, மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இரு இடங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடத்த வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, சாலையோரம் நின்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது, 'மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்க ளுக்கு, நிர்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். அரசாணை 950ன்படி, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
'தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, ஒப்பந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.