/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பஸ் வசதி இல்லாத கொண்டாபுரம் மினி பேருந்து இயக்க எதிர்பார்ப்பு பஸ் வசதி இல்லாத கொண்டாபுரம் மினி பேருந்து இயக்க எதிர்பார்ப்பு
பஸ் வசதி இல்லாத கொண்டாபுரம் மினி பேருந்து இயக்க எதிர்பார்ப்பு
பஸ் வசதி இல்லாத கொண்டாபுரம் மினி பேருந்து இயக்க எதிர்பார்ப்பு
பஸ் வசதி இல்லாத கொண்டாபுரம் மினி பேருந்து இயக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 26, 2025 04:13 AM

ஆர்.கே. பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து கொண்டாபுரம் வழியாக சோளிங்கருக்கு மினி பேருந்து இயக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரி ஊராட்சிக்கு உட்பட்டன கொண்டாபுரம், கொண்டாபுரம் காலனி மற்றும் அருந்ததி காலனி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஆர்.கே. பேட்டைக்கு எந்தவித போக்குவரத்து வசதியும் கிடையாது.
இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களின் அன்றாட பணி நிமித்தமாக சோளிங்கருக்கு தினசரி சென்று வருகின்றனர். இந்தப் பகுதியில் இருந்து சோளிங்கருக்கு நேரடியான பேருந்து வசதி கிடையாது.
கொண்டாபுரத்திலிருந்து ஞானக்கொல்லி தோப்பு கூட்டு சாலை வரை நடந்தே சென்று, அங்கிருந்து பேருந்து மற்றும் ஆட்டோகளில் சோளிங்கருக்கு பயணிக்கின்றனர். கிராமத்திலிருந்து கூட்டு சாலை வரை 2 கி.மீ., துாரத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் கர்ப்பிணியர் மற்றும் முதியவர்கள் மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக சோளிங்கருக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே ஆர்.கே.பேட்டையில் இருந்து கொண்டாபுரம் வழியாக சோளிங்கருக்கு மினி பேருந்து இயக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.