/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா? பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா?
பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா?
பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா?
பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா?
ADDED : செப் 26, 2025 04:13 AM

திருப்பாச்சூர்:திருப்பாச்சூர் பகுதியில் ஒருங்கிணைந்த பெண்கள் சுகாதார வளாகம் பூட்டியே கிடப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பகுதி பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் அடுத்துள்ளது பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட திருப்பாச்சூர் ஊராட்சி.
இங்குள்ள வாசீஸ்வரர் சுவாமி கோவில் அருகே, 15 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பராமரிப்பு இல்லாததால், 2020-21ம் ஆண்டு 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்டது.
அதன் பின்னும் கட்டடம் பூட்டியே கிடப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பகுதி பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென, பெண்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.