Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கூவம் திரிபுராந்தகர் கோவில் செயல் அலுவலகத்துக்கு பூட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம்

கூவம் திரிபுராந்தகர் கோவில் செயல் அலுவலகத்துக்கு பூட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம்

கூவம் திரிபுராந்தகர் கோவில் செயல் அலுவலகத்துக்கு பூட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம்

கூவம் திரிபுராந்தகர் கோவில் செயல் அலுவலகத்துக்கு பூட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம்

ADDED : அக் 22, 2025 10:47 PM


Google News
Latest Tamil News
கடம்பத்துார்: கூவம் திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அலுவலகம் பூட்டியே கிடப்பதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடம்பத்துார் ஒன்றியம் கூவம் ஊராட்சியில் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில் அமைந்துள்ளது.

ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், கடந்த 2011ம் ஆண்டு முதல் கோவில் தக்காராக சண்முகம் என்பவர் இருந்து வந்தார். இவர், 2020ல் மரணமடைந்தார்.

இதனால், கோவில் வரவு - செலவு மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பணி பாதிக்கப்பட்டதை அடுத்து, திருவள்ளூர் உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் கோவில் வந்தது.

அதன்பின், இதே பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர், கடந்த 2021ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தக்காராக, தன்னை பணி நியமனம் செய்ய வேண்டுமென வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து நீதிமன்றம், 2021 ஏப்ரல் 8ம் தேதி முதல், கோவில் வங்கி கணக்குகளை மட்டும், ஆறு வார காலத்திற்கு கவனிக்க வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை டில்லிபாபு என்பவர் கோவில் தக்காராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கோவில் அருகே உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அலுவலகம், கடந்த சில நாட்களாக பூட்டியே கிடப்பது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தகர் கோவிலில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கூவம் திரிபுராந்தக கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் லதா கூறியதாவது:

கூவம் திரிபுராந்தகர் கோவிலில், ஆறு வார காலத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தக்காராக நியமிக்கப்பட்ட டில்லிபாபு என்பவர், நான்காண்டுகளாக எவ்வித அனுமதியுமின்றி பணி மேற்கொண்டு வருகிறார்.

மேலும், செயல் அலுவலர் அலுவலகம் பூட்டப் பட்டுள்ளது குறித்து, டில்லிபாபுவிடம் கேட்ட போது முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கிறார். இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு தகவல் அளித்துள்ளோம்.

மேலும், திரிபுராந்தகர் கோவிலுக்கு புதிய தக்காரை நியமிக்கவும் இணை ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இணை ஆணையர் உத்தரவுக்கு பின் நட வடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூவம் திரிபுராந்தகர் கோவில் செயல் அலுவலர் அலுவலகம் பூட்டப்பட்டது குறித்து தகவல் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட செயல் அலுவலரிடம், காவல்துறையிடம் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனிதா, இணை ஆணையர், ஹிந்து சமய அறநிலையத்துறை, திருவள்ளூர்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us