/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மத்துாரில் பூட்டி கிடக்கும் துணை சுகாதார நிலையம் மத்துாரில் பூட்டி கிடக்கும் துணை சுகாதார நிலையம்
மத்துாரில் பூட்டி கிடக்கும் துணை சுகாதார நிலையம்
மத்துாரில் பூட்டி கிடக்கும் துணை சுகாதார நிலையம்
மத்துாரில் பூட்டி கிடக்கும் துணை சுகாதார நிலையம்
ADDED : செப் 26, 2025 04:07 AM

திருத்தணி:- மத்துாரில் பூட்டிக் கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருத்தணி ஒன்றியம் மத்துார் ஊராட்சிக்கு செல்லும் நெடுஞ்சாலையோரம், கடந்த ஒரு வருடத்திற்கு முன் துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது.
சில நாட்கள் மட்டுமே திறந்திருந்த அந்த நிலையத்தில், கர்ப்பிணியர் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதுடன், பொதுமக்களுக்கு சிசிக்சையும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல், பூட்டியே உள்ளதாக மத்துார் கிராம மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சுகாதார நிலையம் மூடப்பட்டு உள்ளதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
துணை சுகாதார நிலையத்தின் பின்புறம், டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருவதால், குடிமகன்கள் தொல்லையால் செவிலியர்கள் வேலைக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர் என, சுகாதார துறை சார்பில் கூறப்படுகிறது.
மேலும், சுகாதார நிலையத்தை திறந்து பராமரிக்காததால், தற்போது முட்செடிகள் வளர்ந்துள்ளன.
எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பூட்டிக் கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.