குட்கா பறிமுதல் ஒருவர் சிக்கினார்
குட்கா பறிமுதல் ஒருவர் சிக்கினார்
குட்கா பறிமுதல் ஒருவர் சிக்கினார்
ADDED : செப் 23, 2025 10:33 PM
ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து குட்கா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் நேற்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, பேருந்திற்காக நின்று கொண்டிருந்தவரை போலீசார் சோதனை செய்தனர். அவரது பையில், குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது.
விசாரணையில், பெரியபாளையம், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர், 38, என தெரிந்தது. அவரிடம் இருந்து, 6 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.