/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'ஏசி' தொழிற்சாலையில் உதிரி பாகங்கள் திருட்டு 'ஏசி' தொழிற்சாலையில் உதிரி பாகங்கள் திருட்டு
'ஏசி' தொழிற்சாலையில் உதிரி பாகங்கள் திருட்டு
'ஏசி' தொழிற்சாலையில் உதிரி பாகங்கள் திருட்டு
'ஏசி' தொழிற்சாலையில் உதிரி பாகங்கள் திருட்டு
ADDED : செப் 25, 2025 01:32 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே தனியார் 'ஏசி' தொழிற்சாலையில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பித்தளை உதிரிபாகங்கள் திருடு போனது.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, பனத்தம்மேட்டுகண்டிகை கிராமத்தில், தனியார் 'ஏசி' தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இரு நாட்களுக்கு முன், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பித்தளை உதிரிபாகங்கள் திருடு போனது. தொழிற்சாலை நிர்வாகம் சார்பில், பாதிரிவேடு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.