ADDED : செப் 25, 2025 01:32 AM
திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் அருகே, டிரான்ஸ்பார்மர் அமைக்க வைக்கப்பட்டிருந்த காப்பர் ஒயரை திருடியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கனகம்மாசத்திரம் அடுத்த புதுார் பகுதியில், தனியார் பார்மா கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் இந்தக் கல்லுாரி வளாகத்தில், 16 கி.வோ., டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக, மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மர் மற்றும் காப்பர் ஒயர்களை வைத்தனர்.
நேற்று முன்தினம் கல்லுாரி வளாகத்தில் வைத்திருந்த 200 கிலோ காப்பர் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.