/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சட்டவிரோத மதுவிற்பனை தடுக்ககோரி பெண்கள் முற்றுகை சட்டவிரோத மதுவிற்பனை தடுக்ககோரி பெண்கள் முற்றுகை
சட்டவிரோத மதுவிற்பனை தடுக்ககோரி பெண்கள் முற்றுகை
சட்டவிரோத மதுவிற்பனை தடுக்ககோரி பெண்கள் முற்றுகை
சட்டவிரோத மதுவிற்பனை தடுக்ககோரி பெண்கள் முற்றுகை
ADDED : மார் 20, 2025 09:27 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள, ஓபசமுத்திரம் மீனவ கிராமத்தில், 24 மணி நேரமும் சிலர், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து, கிராமவாசிகள் பல முறை ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளனர்.
புகார் மீது நடவடிக்கை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் மாலை, ஓபசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.