ADDED : மார் 20, 2025 09:27 PM
திருத்தணி:திருத்தணி தாலுகாவை சேர்ந்த பிளஸ் 1 மாணவியிடம் திருத்தணி ஜோதிநகரை சேர்ந்த வெங்கடேசன், 26, காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, மூன்று நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து,நேற்று வெங்கடேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.