/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ கடையில் இருந்த பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி நகை பறித்த 7 பேர் சிக்கினர் கடையில் இருந்த பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி நகை பறித்த 7 பேர் சிக்கினர்
கடையில் இருந்த பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி நகை பறித்த 7 பேர் சிக்கினர்
கடையில் இருந்த பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி நகை பறித்த 7 பேர் சிக்கினர்
கடையில் இருந்த பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி நகை பறித்த 7 பேர் சிக்கினர்
ADDED : செப் 20, 2025 03:46 AM

துாத்துக்குடி:கடையில் தனியாக இருந்த பெண்ணிடம், அரிவாளை காட்டி மிரட்டி நகை பறித்த வழக்கில், ஏழு பேரை போலீசார், நேற்று கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், ஏரல், கொற்கை மணலூரை சேர்ந்த விஜய் மனைவி சங்கீதா, 29. வாழவல்லான் பகுதி பைக் உதிரிபாகங்கள் விற்பனை கடை பணியாளர். கடந்த 15ம் தேதி மதியம், இரு பைக்குகளில் நான்கு பேர் கடைக்கு வந்துள்ளனர்.
அதில் இருவர், 'மாஸ்க்' அணிந்தபடி கடைக்குள் நுழைந்துள்ளனர். ஹெல்மெட் அணிந்த இருவர் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.
கடைக்குள் நுழைந்த இருவரும் பொருட்கள் வாங்குவது போல பேசி, இடுப்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி, சங்கீதா அணிந்திருந்த செயினை கழற்றி தருமாறு மிரட்டினர். அவர் கூச்சலிட்டதால், 2.5 சவரன் தாலி செயினை பறித்து தப்பினர்.
ஏரல் போலீசார் நடத்திய விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டது திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தை சேர்ந்த அம்மார், 19, முன்னீர்பள்ளத்தை சேர்ந்த சங்கரபாண்டியன், 23, அவரது மனைவி சிவஜோதி, 21, மேலப்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், 19, மற்றும் மூன்று இளம் சிறார்கள் என தெரியவந்தது.
ஏழு பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, நகை விற்ற பணம், இரு அரிவாள்கள், இரு பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கடையில் புகுந்து பெண்ணை அரிவாளை காட்டி மிரட்டி, நகையை பறித்து சென்ற காட்சி, தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.