ADDED : செப் 21, 2025 01:16 AM

துாத்துக்குடி:திருப்பூர் மாவட்டம், சித்துாரை சேர்ந்த 30 பேர், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் துரைசாமி என்பவரது மனைவி ராணி, 51, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
அப்போது, கடலில் நீராடிக் கொண்டிருந்த மற்றொரு பக்தர் மேல் வேகமாக விழுந்ததில் ராணிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அண்ணா தெருவை சேர்ந்த தமிழ்செல்வி, 43, என்பவரும் நேற்று முன்தினம் கடல் அலையில் சிக்கியதால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.