/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
ADDED : செப் 21, 2025 01:42 AM
துாத்துக்குடி:காவல் நிலையம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்த ஒரு காரில் ஆண் மற்றும் பெண் ஒருவர் இருந்தனர். அங்கிருந்தவர்களிடம் தாங்கள் விஷம் குடித்துவிட்டதாக அவர்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இருவரையும் மீட்ட போலீசார் ஆட்டோ மூலம் குலசேகரன்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் இருவரும் திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், திருநெல்வேலி, வண்ணாரபேட்டையை சேர்ந்த இருவரும் கள்ளக்காதல் ஜோடி என தெரியவந்தது.
போலீசார் கூறியதாவது:
திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் தங்கவேல்சாமி, 39, மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுப்பையா மனைவி பார்வதி, 24, என்பவருடன் நெருங்கி பழகி உள்ளார்.
பார்வதியை கண்டித்த சுப்பையா பிரிந்து சென்றுவிட்டார். இரண்டு ஆண் குழந்தைகளுடன் வசித்த பார்வதியும், தங்கவேல்சாமியும் சில நாட்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். காரில் குலசேகரன்பட்டினம் காவல் நிலையம் அருகே வந்த அவர்கள் விஷம் குடித்துவிட்டதாக அங்கிருந்தவர்களிடமும், போலீசாரிடமும் கூறினர்.
மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர். இருவரும் எதற்காக குலசேகரன்பட்டினம் வந்தனர், எதற்காக விஷம் குடித்தனர் என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.