/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ 6 மாதமாக குடிநீர் வழங்கப்படாத கிராமம் காலி குடங்களுடன் பெண்கள் மறியல் 6 மாதமாக குடிநீர் வழங்கப்படாத கிராமம் காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
6 மாதமாக குடிநீர் வழங்கப்படாத கிராமம் காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
6 மாதமாக குடிநீர் வழங்கப்படாத கிராமம் காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
6 மாதமாக குடிநீர் வழங்கப்படாத கிராமம் காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
ADDED : செப் 26, 2025 03:14 AM

துாத்துக்குடி:ஆறு மாதமாக குடிநீர் வழங்கப்படாமல் இருந்ததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், காலி குடங்களுடன் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் யூனியன், அணியாபரநல்லூர் பஞ்சாயத்திற்குட்பட்ட புதுப்பட்டி கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கடந்த ஆண்டு இங்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்தது. தரமில்லாத குழாய்களை பயன்படுத்தினர் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இதனால், கடந்த ஆறு மாதங்களாக புதுப்பட்டி கிராமத்திற்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. பஞ்சாயத்து தலைவர் பதவி காலம் முடிவடைந்துவிட்டதால் அதிகாரிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கிராமத்தில் உள்ள பெண்கள் நேற்று காலி குடங்களுடன் புதுப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சு நடத்தினர். குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.