/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ அங்கன்வாடியில் தடுப்பூசி போட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு அங்கன்வாடியில் தடுப்பூசி போட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு
அங்கன்வாடியில் தடுப்பூசி போட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு
அங்கன்வாடியில் தடுப்பூசி போட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு
அங்கன்வாடியில் தடுப்பூசி போட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு
ADDED : செப் 26, 2025 02:47 AM

அடுக்கம்பாறை:தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், சுகாதார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை, ஊசி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்; டிரைவர். இவரது மனைவி கிருத்திகா.
தம்பதியின் மகன் பூமிஸ், 2. இந்த குழந்தைக்கு, அப்பகுதி அங்கன்வாடியில் நேற்று முன்தினம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு துாங்கிய பூமிஸ், நேற்று காலை அசைவின்றி இருந்தான்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர், பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதையடுத்து, அங்கு வந்த வாணியம்பாடி தாலுகா போலீசார், குழந்தையின் உடலை உறவினர்களிடம் இருந்து மீட்டு, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு துாக்கி வந்தனர்.
இதை கண்டித்து, அடுக்கம்பாறை பகுதியில், போலீசார் வந்த ஆம்புலன்சை வழிமறித்து, குழந்தை இறக்க காரணமாக இருந்த சுகாதார ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குழந்தையின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார், பிரேத பரிசோதனைக்கு பின், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் கலைந்தனர்.