ADDED : செப் 17, 2025 01:19 AM
ஆம்பூர்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் புதுமண்டி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சரவணன், 38. இவர், வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடால் கணவனை பிரித்த மனைவி, போளூரிலுள்ள தன் தாய் வீட்டில் வசிக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு, வீட்டிலிருந்து வெளியே சென்ற சரவணன், அதன் பின் வீடு திரும்பவில்லை. நேற்று அதிகாலை, தேசிய நெடுஞ்சாலை அருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆம்பூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.