/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ சிகிச்சையில் மாணவர் 'சீரியஸ்' போலி டாக்டர் சுற்றிவளைப்பு சிகிச்சையில் மாணவர் 'சீரியஸ்' போலி டாக்டர் சுற்றிவளைப்பு
சிகிச்சையில் மாணவர் 'சீரியஸ்' போலி டாக்டர் சுற்றிவளைப்பு
சிகிச்சையில் மாணவர் 'சீரியஸ்' போலி டாக்டர் சுற்றிவளைப்பு
சிகிச்சையில் மாணவர் 'சீரியஸ்' போலி டாக்டர் சுற்றிவளைப்பு
ADDED : செப் 15, 2025 02:10 AM
ஆம்பூர்,:தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற கல்லுாரி மாணவர் உடல்நிலை மோசமான நிலையில், அவருக்கு சிகிச்சையளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பத்தை சேர்ந்தவர் பழனிராஜன், 65; டிப்ளமா ஆயுர்வேதிக் யுனானி படித்துள்ளதாக கூறி, 'குமரன் கிளினிக்' என்ற பெயரில் கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அம்பாலப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 18. வேலுார் மாவட்டம், டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை கல்லுாரி முதலாமாண்டு மாணவர். ஆக., 26ம் தேதி அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், பழனிராஜன் கிளினிக்கில் சிகிச்சை பெற்றார்.
சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்தவரை, சக மாணவர்கள் மீட்டு, கவலைக்கிடமான நிலையில், சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து, திருப்பத்துார் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சிக்கு புகார் சென்றது.
அதன்படி, ஆம்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் யோகேஸ்வரன் தலைமையிலான குழுவினர், பழனிராஜனின் கிளினிக்கில் விசாரணை நடத்தியதில், அவர் போலி டாக்டர் என தெரியவந்தது. இதையடுத்து, கிளினிக்கிற்கு சீல் வைத்தனர்.
ஆம்பூர் போலீசார் பழனிராஜனை கைது செய்தனர்.