/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
ADDED : செப் 16, 2025 02:22 AM
திருப்பத்துார்
திருப்பத்துார் அருகே, தண்ணீர் கேட்பது போல் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியிடம், 2.5 பவுன் நகையை பறித்த பெண்ணை, போலீசார் கைது
செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஜலகாம்பாறை அடுத்த ஜடையனுாரை சேர்ந்தவர் கண்ணம்மாள், 70. கணவனை இழந்த இவர், தனியாக வசித்து வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலவள்ளி பகுதியை சேர்ந்த கோகுல் மனைவி சுமதி, 40. இவர் நேற்று ஜடையனுார் பகுதிக்கு தன் உறவினரை பார்க்க வந்தார். இவர், கண்ணம்மாள் தனியாக இருப்பதை அறிந்து அவருடைய வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்பது போல் நடித்து, அவர் அணிந்திருந்த, 2.5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினார். கண்ணம்மாள் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர், துரத்திச்சென்று, சுமதியை மடக்கி பிடித்து, குரிசிலாப்பட்ட போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் சுமதியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.