/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு
தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு
தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு
தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு
ADDED : ஜூலை 14, 2024 11:23 PM

பல்லடம்;பல்லடம் அடுத்த, சேகாம்பாளையம்- சேடபாளையம் ரோட்டை சேர்ந்தவர் சுபாஷ், 38; பனியன் தொழிலாளி.
இவரது மனைவி ராணி, 34; 2 வயது குழந்தை சாய் சர்வேஷ்.
நேற்று காலை, சாய் சர்வேஷ் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.
குழந்தை திடீரென காணவில்லை என, பதட்டமடைந்த ராணி, அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்த போது, அருகிலுள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை மூழ்கி கிடந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறினர். தொட்டியின் மூடி சரியாக மூடப்படவில்லை என்று கூறப்படுகிறது. பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.